மன அழுத்தம் குறைய போலீசாருக்கு பயிற்சி வகுப்பு சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
மன அழுத்தத்தை குறைப்பது தொடர்பாக போலீசாருக்கு 3 நாட்கள் பயிற்சி வகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
தேனி,
தமிழ்நாடு போலீஸ் துறையும், பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனமும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், உடல் நலத்தையும், மன நலத்தையும் மேம்படுத்திக் கொள்ளவும் நிறைவாழ்வு பயிற்சி என்ற பெயரில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கி நடந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் உள்ள தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளி கட்டிடத்தில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கியது. இது 3 நாட்கள் பயிற்சி. முதல் 2 நாட்கள் போலீசாருக்கும், கடைசி நாளில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
முதற்கட்டமாக 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 40 பேர் வீதம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசினார்.
பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், கம்பம் ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
மன அழுத்தத்தை புரிந்து கொள்ளுதல், மன அழுத்தத்தால் உடலில் ஏற்படும் விளைவுகள், மன அழுத்தத்தால் ஏற்படும் உளவியல் நிலையிலான வெளிப்பாடு, வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம், குடும்ப வாழ்க்கை சுழற்சியில் மன அழுத்தத்தை புரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட 40 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்ற போலீசாருக்கு நிறைவாழ்வு பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது.