செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்ததன் எதிரொலி: அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்
கரூரில் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்ததன் எதிரொலியாக அ.ம.மு.க.வினர் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
கரூர்,
கரூரை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி (வயது 43). 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இவர், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கரூர் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைப்பு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். தகுதி நீக்க வழக்கில் அப்பீலுக்கு செல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால் டி.டி.வி.தினகரன் மீது செந்தில்பாலாஜிக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனால் தி.மு.க.வில் இணைய முடிவெடுத்த அவர் தனது ஆதரவாளர்களுடன் கருத்து கேட்ட பின், நேற்று அவர்களுடன் சென்னைக்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார்.
இந்தநிலையில் கரூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், அ.ம.மு.க.வை சேர்ந்த வாங்கல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், புஞ்சை புகழூர் பேரூர் கழக செயலாளர் விவேகானந்தன் உள்பட கரூர் அ.ம.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு, மகளிர் பிரிவை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது கீதா எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் தானேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், ஜெயலலிதாவின் வழியை செந்தில்பாலாஜி பின்பற்றுவதாக கூறியதால் நாங்கள் அ.ம.மு.க.வுக்கு சென்றோம். தற்போது அவரது மனமாற்றம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இதனால் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வந்து விட்டோம் என்றனர்.
இதற்கிடையே செந்தில்பாலாஜி மு.க.ஸ்டாலினை சந்தித்த தகவல் அறிந்ததும், கரூர் கட்சி அலுவலகத்தில் இருந்து அ.தி.மு.க.வினர், மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானாவுக்கு வந்தனர். அப்போது, செந்தில்பாலாஜி அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் தி.மு.க., பிறகு ம.தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் சேர்ந்து, தற்போது தி.மு.க.விற்கு சென்றுள்ளார். விரைவில் கட்சி தாவலில் அவர் சாதனை புரிவார் என கிண்டலுடன் கூறி, இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர். அப்போது “5-வது முறையாக கட்சி மாறுபவருக்கு வழியனுப்பு விழா” என்கிற வாசகங்கள் எழுதிய அட்டைகளை கையில் பிடித்தபடி “தாய் கழகத்திற்கு துரோகம் இழைத்த செந்தில்பாலாஜி ஒழிக” என கண்டன கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து கரூர் பஸ் நிலையம் அருகே செந்தில்பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவர் இதற்கு முன்பு பொறுப்பு வகித்த அ.ம.மு.க.வின் சின்னமான குக்கரை தரையில் போட்டு சம்மட்டியால் அடித்து அ.தி.மு.க.வினர் நொறுக்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இந்த சம்பவங்களால் கரூர் பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வில் செந்தில்பாலாஜி இணைந்ததையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பதாகைகள் கரூரில் வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு புறம் செந்தில்பாலாஜிக்கு எதிராக, ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பேன் என கூறிவிட்டு கட்சி தாவிக் கொண்டிருக்கிறீர்களே என்கிற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை கரூர் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவரது எதிர்ப்பாளர்கள் வைத்திருந்தனர்.