அன்னவாசல் பகுதியில் பாரம்பரியம் மாறாமல் ஏர் பூட்டி நிலக்கடலை விதைக்கும் விவசாயிகள்
அன்னவாசல் பகுதியில் பாரம்பரியம் மாறாமல் ஏர்பூட்டி நிலக்கடலை விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்னவாசல்,
நிலக்கடலை விதைத்த 3 மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால், பெரும்பாலான பகுதியில் கார்த்திகை மாத பட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டு வருகின்றனர். நவீன முறையை கைவிட்டு, பாரம்பரிய முறையில் ஏர் பூட்டி உழுது நிலக்கடலையை விதைத்தால் தான் விளைச்சல் நன்றாக இருக்கும். அவ்வப்போது லேசான மழை பெய்தாலே நிலக்கடலை நன்றாக விளைச்சலை தரும். சென்ற பருவத்தில் நிலக்கடலை பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. எனவே, இப்பருவத்திலாவது விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்று கூறினார்.
அன்னவாசல் பகுதியில் உள்ள செங்கப்பட்டி, சத்திரம், காலாடிப்பட்டி, தாண்றீஸ்வரம், வீரப்பட்டி, சென்னப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக பெய்த மழையை நம்பி, மானாவரி நிலக்கடலை விதைப்பு பணியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மழையால் குளிர்ந்த வயலை, உழவு செய்து, நிலக்கடலை, சோளம், தட்டப்பயிர், பச்சைப்பயிர், துவரை உள்ளிட்ட விதைகளை விதைக்கின்றனர். அதிக அளவில், மானாவரி நிலக்கடலை பயிர் செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விதைத்த நாளில் இருந்து 3 மாதத்திற்குள் அறுவடைக்கு வரும் என்பதால் நிலக்கடலை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக பாரம்பரியம் மாறாமல் விவசாயிகள், நவீன முறையை தவிர்த்து பாரம்பரிய முறைகளில் ஏர் பூட்டி நிலத்தை உழுது நிலக்கடலையை பயிரிட்டு வருகின்றனர். விவசாயிகள் மாடுகள் பூட்டிய ஏர்களை ஓட்டி செல்ல பின்னால் பெண்கள் விதைக்கடலைகளை நிலத்தில் தூவி விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக நிலக்கடலை விதைப்பு பணி அன்னவாசல் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான விதைக்கடலைகளை புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாங்கி வந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-