மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு: கால் டாக்சி மீது மாநகர பஸ் மோதி விபத்து மூதாட்டி பலி; பெண் உள்பட 2 பேர் படுகாயம்
மெரினா கடற்கரை சாலையில் கால் டாக்சி மீது மாநகர பஸ் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார். மேலும் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை,
மெரினா கடற்கரை சாலையில் நேற்று காலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கல்லூரி மாணவர்கள் அலுவலகம் செல்பவர்கள் என பைக், கார் மற்றும் பஸ்கள் சென்று கொண்டிருந்தன.
இந்த நிலையில் மாநில கல்லூரி அருகே கோவளத்தில் இருந்து பிராட்வே (தடம் எண்:109) நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியது. இதில் அந்த கால் டாக்சி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் கால் டாக்சியில் இருந்து பெண்கள் அலறும் சத்தம் கேட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் கால் டாக்சியில் பயணித்த 2 பெண்கள் உள்பட 3 பேரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கால் டாக்சியில் பயணித்த 2 பெண்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கால் டாக்சியை ஓட்டி வந்தவர் அரும்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது 29) என்பதும், அதில் பயணித்தவர்கள் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹேமாவதி(74), மற்றும் அவரது பேத்தி ஆனந்தவள்ளி(29) என்பது தெரியவந்தது. இதில் ஹேமாவதி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் போலீசார் விசாரித்ததில் மாநகர பஸ் அங்கு சென்ற வேனை அதிவேகமாக முந்தி செல்ல முயன்றதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாநகர பஸ்சை ஓட்டிய விழுப்புரத்தை சேர்ந்த ராஜேந்திரனை(35) கைது செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் கால் டாக்சியை போலீசார் பரிமுதல் செய்தனர்.
காலை நேரத்தில் பரபரப்பாக இயங்கும் மெரினா கடற்கரை சாலையில் விபத்து ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்துக்குள்ளான வாகனங் களை விரைந்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.