காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு

கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

Update: 2018-12-13 22:30 GMT
கரூர்,

கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு, நகர தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ராஜஸ்தான், சத்தீஷ்கார் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றமைக்கு தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் தீவிர களப்பணியாற்றுவது. சென்னைக்கு வருகை தரும் சோனியாகாந்தியை வரவேற்க கரூரில் இருந்து ஏராளமானோர் சென்று கலந்து செல்வது, நகராட்சி சார்பில் வீடுகளுக்கு உயர்த்தப்பட்ட கூடுதல் வரியை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, சென்னைக்கு சோனியா காந்தி வருவது தி.மு.க. விழாவிற்கு, சத்தியமூர்த்தி பவனுக்கோ அல்லது காங்கிரஸ் தொடர்புடைய விழாவுக்கோ அல்ல என நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்து பேசியதால் அவருக்கு கட்சி நிர்வாகிகள் பலர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை மூத்த நிர்வாகிகள் சமரசம் செய்தனர். 

மேலும் செய்திகள்