தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இறால் பண்ணை உரிமையாளர் தற்கொலை

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இறால் பண்ணை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-12-13 22:00 GMT
விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவரும் இவருடைய நண்பர்கள் சிலரும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அழகன்குப்பம் மீனவர் பகுதியில் இறால் குஞ்சு பொறிப்பக பண்ணை நடத்தி வருகின்றனர்.

இந்த தொழிலில் கடந்த சில மாதங்களாக நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் செல்வராஜ் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய இறால் பண்ணைக்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள ஒரு அறைக்கு சென்ற அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்