சென்னை மாநகரில் ‘கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்கள் குறைந்துள்ளன’ போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேச்சு
கண்காணிப்பு கேமராக்களின் வளையத்துக்குள் வந்ததால் சென்னை மாநகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்து உள்ளதாக போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் முதல் எண்ணூர் வரை உள்ள எண்ணூர் விரைவு சாலை, மணலி சாலை, கல்மண்டபம் சாலை உள்ளிட்ட 11 சாலைகளில் 998 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சென்னை மாநகரில் ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது ஒரு இயக்கமாக செய்து வருகிறோம். இதற்கு பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் உதவி வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
கண்காணிப்பு கேமராக்களின் வளையத்துக்குள் வந்ததால் சென்னை மாநகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்து உள்ளன. குற்றங்களை குறைப்பதிலும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் இப்போது பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் தாங்கள் கண்காணிப்பு கேமராவால் கண்காணிக்கப்படுகிறோம் என்ற பயத்துடன் உள்ளனர்.
இதனால் கடந்த மாதங்களில் சென்னையில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு கண்காணிப்பு கேமரா அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய உரிய கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கூடுதல் கமிஷனர் அருண், சென்னை தெற்கு இணை கமிஷனர் சுதாகர், போக்குவரத்துத்துறை துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர்கள் தேன், தமிழ்வாணன், அமுல்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம் முருகேசன், இளையராஜா, பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.