‘வாக்குறுதிகளை மறந்தவர்கள் தேர்தலில் தோல்வி’ அன்னாஹசாரே பேட்டி
5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து மும்பையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அளித்தார்.
மும்பை,
5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து மும்பையில் சமூக ஆர்வலர் அன்னாஹசாரே அளித்த பேட்டியில் கூறுகையில், ‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கருப்பு பணம் ஒழிப்பு, வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை மற்றும் அனைவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அவற்றை மறந்து விட்டனர். ஆனால் மக்கள் மறக்கவில்லை.
எனவே தான் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு தோல்வியை கொடுத்து உள்ளனர். இது அடுத்த ஆண்டு வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. பா.ஜ.க. அரசு தனது தவறை உணரவில்லை என்றால், நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வியே கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.