திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-12-12 22:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தொழுவூர் சைதன்யா நகரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 46) தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் சிவகுமார் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தன்னுடைய வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவர் செவ்வாப்பேட்டை பஜாரில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பெருமாள்பட்டை சேர்ந்த சுரேஷ் என்கிற குட்டி(வயது 30) என்பவர் சிவகுமாரின் பாக்கெட்டில் இருந்த ரூ.1000-த்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு அவரை மடக்கி பிடித்தனர். இது குறித்து சிவகுமார் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் என்கிற குட்டியை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்