பாதுகாப்பான பயணத்துக்கு...
உங்களது பயணம் பாதுகாப்பாக அமைய உதவுகிறதுரைவ். காரில் செல்லும்போது உங்கள் ஸ்மார்ட்போனுடன் இந்த சாதனத்தை இணைத்துவிட்டால் உங்களுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு இதுவே பதில் அனுப்பிவிடும்.
உலகம் முழுவதும் நடைபெறும் சாலை விபத்துகளில் நான்கில் ஒன்று செல்போன் பேசுவதால் ஏற்படுவது என தெரிய வந்துள்ளது. சாலையிலிருந்து உங்கள் கவனத்தை சிதறடிக்கும் சில விநாடிப்பொழுதுகள்தான் உயிருக்கே உலை வைத்துவிடுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைக் காட்டிலும் 6 மடங்கு அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் ஸ்மார்ட்போனால் ஏற்படும் கவனச் சிதறலால் ஏற்படுகிறது.
உங்களது பயணம் பாதுகாப்பாக அமைய உதவுகிறதுரைவ். காரில் செல்லும்போது உங்கள் ஸ்மார்ட்போனுடன் இந்த சாதனத்தை இணைத்துவிட்டால் உங்களுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு இதுவே பதில் அனுப்பிவிடும். பயணம் முடிந்த பிறகு அதாவது காரிலிருந்து இறங்கியபிறகு நீங்கள் அலுவலகத்திற்கோ அல்லது வீட்டிற்கு திரும்பிய பிறகோ நிதானமாக பதில் அனுப்பலாம். அல்லது சம்பந்தப்பட்ட நபருடன் பேசலாம்.
ரைவ் சாதனமானது சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் ஒருங்கிணைக்கப்பட்டது. இதை இணைப்பதன் மூலம் கார் ஓட்டுபவர் ஸ்மார்ட்போனில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது தவிர்க்கப்படும். காரினுள் அமர்ந்தவுடன் ஸ்மார்ட்போனை அதற்கான பகுதியில் வைத்துவிட்டு, சார்ஜிங் போர்ட் மூலம் ரைவ் சாதனத்தை இணைத்து, அந்த கருவியை ஸ்மார்ட்போனில் இணைத்துவிட்டால் போதும். கார் இயக்கம் நின்ற பிறகே ஸ்மார்ட்போன் செயல்பாட்டுக்கு வரும். அதுவரை அந்த போனுக்கு வந்த அழைப்புகளுக்கு ரைவ் சாதனமே பதில் குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.
இதை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.