எம்.எம்.கலபுரகி, கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் கொலை வழக்குகள்: ஒன்றுக்கொன்று தொடர்பு இருந்தால் சி.பி.ஐ. விசாரிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை
எம்.எம்.கலபுரகி, கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலை வழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருந்தால் அந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஆலோசனை வழங்கியது.
பெங்களூரு,
மராட்டியத்தை சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி சுட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி தார்வார் டவுன் கல்யான் நகரை சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர் எம்.எம்.கலபுரகியும், அதே ஆண்டில் மராட்டியத்தை சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரேவும், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டில் வைத்து பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
மும்பை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கோவிந்த் பன்சாரே வழக்கை மராட்டிய சிறப்பு விசாரணை குழுவும், எம்.எம்.கலபுரகி கொலை வழக்கு விசாரணையை கர்நாடக சி.ஐ.டி. போலீசாரும், கவுரி லங்கேஷ் கொலை வழக்கை கர்நாடக சிறப்பு விசாரணை குழுவும் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், எம்.எம்.கலபுரகி கொலை வழக்கில் கர்நாடக போலீசார் அலட்சியம் காட்டுவதாக கூறி அவருடைய மனைவி உமா தேவி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த மாதம் 26-ந் தேதி விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, எம்.எம்.கலபுரகி கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன், வழக்கு விசாரணையை கண்காணிக்க மும்பை ஐகோர்ட்டுக்கு உத்தரவிடப்படும் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு 2 வாரத்தில் வழக்கு விசாரணை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் லலித் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு எம்.எம்.கலபுரகி கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் எம்.எம்.கலபுரகி கொலைக்கும், கவுரி லங்கேஷ் கொலைக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் விரைவில் எம்.எம்.கலபுரகி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், முற்போக்கு சிந்தனையாளர்களான எம்.எம்.கலபுரகி, பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலைக்கு இடையே தொடர்பு உள்ளது போன்று, கோவிந்த் பன்சாரே படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் முற்போக்கு சிந்தனையாளர்கள் கொலைகள் குறித்து தனித்தனி அமைப்புகள் விசாரிப்பதை விட, ஒரே அமைப்பு அனைத்து வழக்குகளையும் விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை வழங்கியது.
மேலும், எம்.எம்.கலபுரகி, கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோரின் வழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் பட்சத்தில் அந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கலாம். இதுதொடர்பாக அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் தகவல் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.