மரத்தில் கார் மோதி அய்யப்ப பக்தர்கள் 2 பேர் சாவு - 5 பேர் படுகாயம்
அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அம்மாபேட்டை,
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விஜயவாடா எனமலாகுதுளு பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (வயது 30). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் ஆஞ்சநேயலு மற்றும் அதேப் பகுதியை சேர்ந்த சூரிபாபு (35), வெங்கடேஷ் வரராவ்(30), நாக மல்லேஸ்வர ராவ்(28), போத்துராஜ்(31), அசோக் (30) ஆகியோர் அய்யப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் அனை வரும் ஒரு காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். காரை அசோக் ஓட்டி னார். காரின் முன்பக்க இருக்கையில் ஆஞ்சநேயலு இருந்தார். மற்றவர்கள் அனைவரும் பின்னால் அமர்ந்து இருந்த னர்.
இந்த கார் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த கார் ரோட்டோரத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், இதில் இடி பாடுக்குள் சிக்கிய ஆஞ்சநேயலு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். காருக்குள் சிக்கிய மற்றவர்கள் அனைவரும் சத்தம் போட்டு கத்தினார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் காருக்குள் சிக்கிய தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் போத்துராஜ் மட்டும் சேலத் தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் போத்துராஜ் பரிதாபமாக இறந்தார். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.