நிட்டிங் கட்டணங்கள் உயர்வு தொடர்பாக ஆடை உற்பத்தியாளர்களின் முதற்கட்ட பேச்சுவார்த்தை - சைமா சங்கத்தில் நடைபெற்றது
நிட்டிங் நிறுவனங்கள் கட்டணங்கள் உயர்வு தொடர்பாக உற்பத்தியாளர்களின் முதற்கட்ட பேச்சுவார்த்தை சைமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்,
திருப்பூர் பின்னலாடை தொழில் முன்னேற்றத்திற்காகவும், வர்த்தக வளர்ச்சிக்காகவும் அனைத்து வகையான ஆடை தயாரிப்பாளர்களுக்கும் நிட்டிங், பிளச்சிங், டையிங், கேலண்டரிங், காம்பேக்டிங், பிரிண்டிங் என ஜாப் ஒர்க் நிறுவனங்களின் பங்கு இன்றிமையாத ஒன்றாகி விட்டது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, நிட்டிங் தொழில் செய்து கொடுக்கும் உற்பத்திக்கு ஆட்கள் சம்பளம், ஊசி விலை உயர்வு, மின் கட்டண செலவு, ஆயில், நைலான் நூல், எந்திரங்களுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவைகளின் காரணமாக நிட்டிங் கட்டணங்களை நிட்மா, சிம்கா சங்கங்கள் உயர்த்தி அறிவித்தன.
மேலும், இந்த கட்டணங்கள் கடந்த மே மாதம் 1-ந் தேதியில் இருந்து அமல்படுத்துவதாகவும் இந்த சங்கங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஜி.எஸ்.டி. அமலுக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகளால் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கட்டணங்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்த நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை ஏற்றுமதியாளர்கள் வழங்கக்கோரியும், இந்த கோரிக்கையை ஆடை தயாரிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் நிட்மா, சிம்கா சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் கடந்த 5, 6-ந் தேதிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் நிட்டிங் சங்கங்கள் உயர்த்திய கட்டணங்கள் தொடர்பாக ஆடை உற்பத்தியாளர்களின் முதற்கட்ட பேச்சுவார்த்தை சைமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிட்டிங் பணிகளுக்கான கட்டணங்கள் உயர்வை எவ்வாறு சமாளிப்பது?, கட்டணங்களை குறைத்து கேட்கலாமா? அல்லது வேறு ஏதேனும் வழிகள் இருக்கிறதா? என்பது உள்பட ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், சைமா சங்க தலைவர் வைக்கிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.