ஒப்பந்தப்புள்ளி, செலவினப்பட்டியல் தயாரிப்பை நிறுத்தி வைக்கும் போராட்டம்
ஒப்பந்தப்புள்ளி, செலவினப்பட்டியல் தயாரிப்பை நிறுத்தி வைக்கும் போராட்டம் நடத்துவது என்று பொதுப்பணித்துறை பொறியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இணை செயலாளர் தனசேகரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஏழாவது ஊதியக்குழுவில் பொறியாளர்களுக்கென வெளியிடப்பட்ட அரசாணையை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த பின்னரும் ஏழாவது ஊதியக்குழு விகிதங்களை இன்று வரை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசின் நிதித்துறையை கண்டிப்பது. அநீதி இழைக்கப்பட்ட பொறியாளர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சினையில் மீண்டும் பாராமுகமாய் இருக்கும் நிதித்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க வரும் முதல் காலாண்டில் எந்த ஒரு பணிக்கான ஒப்பந்தப்புள்ளி மற்றும் செலவினப்பட்டியல் தயாரிக்காமல் நிறுத்தி வைக்கும் போராட்டம் நடத்துவது.
பொதுப்பணித்துறையில் திட்டப்பணிகளை விரைந்து செய்திட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்வது. உதவி பொறியாளர் நிலையிலிருந்து உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கிட கோருவது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாள் சம்பளத்தை நிவாரணமாக தமிழக முதல்- அமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைப்பது.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலாளர் அன்பு தீர்மானங்களை விளக்கி பேசினார். திருச்சி கிளை தலைவர் செந்தில்நாதன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.