புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது முத்தரசன் பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2018-12-08 23:00 GMT
திருவாரூர்,


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்றபோது அவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி நிவாரணம் குறித்து கேட்டதற்கு 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதேபோல் நாங்களும் போன போது எங்களையும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

அதற்காக போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை பொறுமையுடன் அனுகினோம். ஏன் என்றால் புயலால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்கள் அப்படி தான் நடந்து கொள்வார்கள். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் மீது தொடரப்பட்ட வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும்.


புயலால் பாதிக்கப்பட்டதற்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. முறையான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு பாகுபாடின்றி அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசிடம் தமிழக அரசு நல்ல இணக்கத்துடன் உள்ளதால் தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடியை பெற வேண்டும். அதற்கு தமிழக அரசிற்கு உறுதுணையாக இருப்போம்.

மக்கள் நலனுக்காக தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணி தேர்தல் கூட்டணி தான். புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழக அரசு மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்