நெல்லை மாநகர பகுதியில் 17 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
நெல்லை மாநகர பகுதியில் 17 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாநகர பகுதியில் 17 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்திற்கும், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன், மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும், மாநகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி, டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கும், மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமி, டவுன் போலீஸ் நிலையத்திற்கும், போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரோகிணிசெல்வி, எஸ்.சி.எஸ். சிறப்பு பிரிவுக்கும், சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மெர்சி, காவல்கட்டுப்பாட்டு அறைக்கும், டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
காவல் கட்டுப்பாட்டு அறை
நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பம், பாளையங்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கும், பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்குமார், தச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கும், மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிஈசுவரி, சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கும், காவல்கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பிரவீன், டவுன் போலீஸ் நிலையத்திற்கும், மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரசிதா, காவல்கட்டுப்பாட்டு அறைக்கும், எஸ்.சி.எஸ். சிறப்பு பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள், மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் பிறப்பித்து உள்ளார்.