கோவில்பட்டி பகுதியில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி

கோவில்பட்டி பகுதியில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்துக்கு அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.கவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-12-05 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி பகுதியில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்துக்கு அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.கவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கோவில்பட்டி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்துக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு நகர அ.தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர், கடம்பூர் சிதம்பராபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் ஈசுவர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடம்பூர்

கடம்பூரில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு

கயத்தாறு புதிய பஸ் நிலையம், கீழ பஜார் ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் கப்பல் ராமசாமி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கயத்தாறில் அ.ம.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்