காரை ஜப்தி செய்ய முயன்ற விவகாரம்: கலெக்டர் புகாரின் பேரில் முதியவர் மீது வழக்குப்பதிவு
சிவகங்கை மாவட்ட கலெக்டரின் காரை ஜப்தி செய்ய முயன்றது தொடர்பாக கலெக்டர் அளித்த புகாரின் பேரில் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காளையப்பா நகரைச் சேர்ந்தவர் முகமது காசிம் (வயது 63). அதே பகுதியில் இவருக்குச் சொந்தமாக இடம் இருந்தது. இந்த இடம் சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கடந்த 1998-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.136 வீதம் விலைக்கு பேசி ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி முகமது காசிம் சிவகங்கையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 4.10.2016-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது இடம் வழங்கிய முகமது காசிமுக்கு அரசு தரப்பிலிருந்து ரூ.26 லட்சத்து 37 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் பல ஆண்டுகளாகியும் உரிய பணம் வழங்கப்படவில்லை. இதனால் முகமது காசிம் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கில் கலெக்டரின் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து முகமது காசிம், நீதிமன்ற அமீனாவுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் காரில் வந்து இறங்கி அலுவலகத்திற்கு சென்று விட்டார். டிரைவர் வழக்கமான இடத்தில் காரை நிறுத்தி விட்டு சென்றுவிட்டார். இதனால் மாலை 6 மணி வரை காத்திருந்த அவர்கள், அதன் பின்பு ஜப்தி நோட்டீசை காரில் ஒட்டினர். காரை எடுத்து செல்ல முடியாததால் முகமது காசிம் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்திருந்தார். பின்னர் நள்ளிரவில் அவர் சென்று விட்டார்.
இந்தநிலையில் கலெக்டர் ஜெயகாந்தன் இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், இந்த வழக்கு ஆதிதிராவிடர்துறை தனி தாசில்தார் மீது போடப்பட்டது. எனவே என்னுடைய காரை ஜப்தி செய்ய முயற்சிக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவித்தும், அலுவலகத்தில் பணியை செய்ய விடாமல் அவர் தடுத்ததாக கூறியிருந்தார். இதையடுத்து சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், முகமது காசிம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.