எண்ணூரில் வீட்டில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
எண்ணூரில் வீட்டில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
எர்ணாவூர் பாரத் நகரில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக எண்ணூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள முத்துபாண்டி (வயது 47) என்பவருக்கு சொந்தமான வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
கைது
அப்போது அவரது வீட்டில் 50 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரான முத்துபாண்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.