முதல்-அமைச்சரின் பரிசீலனைக்கு கொண்டு சென்று, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் குறித்து முடிவு செய்வோம் - அமைச்சர் தங்கமணி பேட்டி
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது குறித்து முதல்-அமைச்சரின் பரிசீலனைக்கு கொண்டு சென்று முடிவு செய்வோம், என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 4,031 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர்.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினர். பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க் களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
புயல் பாதித்த மாவட்டங்களில் பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. மாறாக அவர்கள் சேவையை கருத்தில் கொண்டு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும். ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வது குறித்து முதல்-அமைச்சரின் பரிசீலனைக்கு கொண்டு சென்று முடிவு செய்வோம்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.பேட்டியின்போது பி.ஆர்.சுந்தரம் எம்.பி. உடன் இருந்தார். முன்னதாக அவர் திருச்செங்கோட்டில் நடந்த விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.