அமெரிக்கா விசா பெற போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்த பட்டதாரிகள் 7 பேர் கைது 3 ஏஜெண்டுகளும் சிக்கினர்
அமெரிக்கா விசா பெறுவதற்காகபோலி சான்றிதழ்கள் சமர்ப்பித்த 7பட்டதாரிகள்பிடிபட்டனர். மேலும் இதில் தொடர்புடைய 3 ஏஜெண்டுகளும் கைது செய்யப்பட்டனர்.;
மும்பை,
அமெரிக்கா விசா பெறுவதற்காகபோலி சான்றிதழ்கள் சமர்ப்பித்த 7பட்டதாரிகள்பிடிபட்டனர். மேலும் இதில் தொடர்புடைய 3 ஏஜெண்டுகளும் கைது செய்யப்பட்டனர்.
7 பட்டதாரிகள் கைது
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமெரிக்கத் தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தில் விசா கேட்டு 7 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விண்ணப்பங்களை சரிபார்த்த போது, அதில் இணைக்கப்பட்டு இருந்த அமெரிக்காவில் கப்பலில் வேலை செய்வதற்கான பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணை
விசாரணையில், அவர்கள் மும்பை, குஜராத், கேரளா, பஞ்சாப் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
போலி பணி நியமன ஆணைகளை ஏஜெண்டுகள் கொடுத்ததாக, அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்படி இதில் தொடர்புடைய ஏஜெண்டுகள் ஆசிப் ராஸ்கர் (வயது25), லலித் மாத்ரே (50), சங்கர் சில்லோரி (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு போலி பணி நியமன ஆணையை தயார் செய்து வழங்கியது தெரியவந்தது.