சிறந்த முறையில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
சிறந்த முறையில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினர் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு தமிழக அரசால் 2017-18-ம் நிதியாண்டிற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருது வழங்கப்பட உள்ளது.
எனவே வட்டாரங்களில் சிறப்பாக செயல்படும் கூட்டமைப்புகளும், குழுக்களும் வருகிற 10-ந் தேதிக்குள் தங்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் குழுவின் கருத்துருக்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இந்த விருது பெற கூட்டமைப்பு சுய உதவிக்குழு தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் திட்ட குழுக்களையும் இணைத்திருக்க வேண்டும். ஆண்டிற்கு குறைந்தபட்சம் 20 கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். இரண்டாவது தரமதிப்பீடு முடித்திருக்க வேண்டும்.
சுழற்சி முறையில் நிர்வாகிகள் இரண்டு முறை மாற்றம் செய்திருக்க வேண்டும். மூன்று முறை வங்கி கடன் பெற்றிருக்க வேண்டும். கடனை சிறந்த முறையில் திரும்பி செலுத்தி இருக்க வேண்டும். சமூக மற்றும் சமுதாய பணிகள் மேற்கொள்ளுதல், பதிவேடு பராமரித்தல், சமுதாய பயிற்றுனர் இருத்தல், உறுப்பினர்கள் தொழில் செய்தல், சந்தைப் படுத்துதல், கூட்டமைப்பு அங்கீகாரம், கூட்டமைப்பு பெரும் கடன், உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற விவரம் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.