இடைநிற்றலை தவிர்க்க மாணவர் வருகையை செல்போன் செயலியில் பதிவு செய்ய ஏற்பாடு

மாணவர் வருகையை செல்போன் செயலியில் பதிவு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இது குறித்து பயிற்சி தரப்பட்டது.

Update: 2018-12-04 22:41 GMT
விருதுநகர்,

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் பள்ளிக் கல்வி துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருகையை செல்போன் செயலி மூலம் பதிவு செய்யும் முறை குறித்த விளக்க கூட்டம் மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் செல்போன் செயலி மூலம் மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் முறை குறித்து விளக்கிக்கூறினார்.

அப்போது அவர், முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த செயலி மூலம் பள்ளி மாணவர்களின் தொடர் வருகை பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களால் தினமும் கண்காணிக்கப்பட்டு இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவும், தரமான கல்வியை அளிக்க இந்த செயலி கல்வித்துறைக்கு அடிப்படையாக இருக்கும் என்றார்.

முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் நல்லதம்பி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகுதிருநாவுக்கரசு ஆகியோர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்