பரமத்திவேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் அமெரிக்காவில் வசிக்கும் என்ஜினீயர் மீது மனைவி புகார்
அமெரிக்காவில் வசிக்கும் என்ஜினீயர் மீது மனைவி, பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், திருமணத்தின்போது கொடுத்த நகை, பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும், என்று கூறியுள்ளார்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் ஆர்த்தி (வயது 30). இவர் பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எனக்கும், பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் சரவணன் (33) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி திருமணம் நடைபெற்றது. சரவணன் அமெரிக்காவில் மென்பொறியாளராக (என்ஜினீயர்) பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது எனது பெற்றோர் 120 பவுன் நகையும், ரொக்கம் ரூ.10 லட்சமும் கொடுத்தனர்.
திருமணமான சில நாட்களிலேயே பணம் மற்றும் நகைகளை எனது கணவர் சரவணன் மற்றும் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர். மேலும் கோவையில் என் பெயரில் வீட்டுமனை வாங்குவதாக கூறி சரவணன் எனது பெற்றோரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை வாங்கி அவரது பெயரில் பதிவு செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு என்னை அழைத்து சென்றார். அங்கு சில மாதங்களுக்கு பிறகு எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. இது குறித்து கேட்டதால் அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். கருவுற்றிருந்த நான் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் எனது உறவினர் ஒருவர் என்னை இந்தியாவிற்கு அழைத்து வந்து எனது பெற்றோரிடம் விட்டுச்சென்றார்.
சில மாதங்களுக்கு பிறகு எனக்கு பெண் குழந்தை பிறந்தபோது குழந்தையை பார்க்க வருமாறு பலமுறை கூறியும் எனது கணவர் சரவணன் வரவில்லை. பின்னர் எனது சகோதரர் திருமணத்திற்கு வருமாறு அழைத்தபோது 10 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் தந்தால் வருவதாக கூறினார். இதனையடுத்து எனது பெற்றோர் பணம் மற்றும் நகை தருவதாக ஒப்புக்கொண்ட பிறகு திருமணத்திற்கு வந்தார்.
பின்னர் அமெரிக்காவிற்கு சென்றவர் மூன்று மாதங்கள் மட்டும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக சரவணன் என்னுடன் தொலைபேசியில் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இந்தநிலையில் எனது பெற்றோர், உறவினர்களுடன் சரவணனின் பெற்றோரிடம் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகாததால் திருமணத்திற்கு கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். அப்போது சரவணனின் தந்தை தங்கவேல், தாய் இந்திரா ஆகியோர் எனது தந்தை லோகநாதனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.
என் தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் மற்றும் நகையை கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் இருந்து பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் ஆர்த்தியின் கணவர் சரவணன், மாமனார் தங்கவேல், மாமியார் இந்திரா ஆகியோர் மீது பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.