கந்துவட்டி கேட்டு போலீஸ்காரர் மிரட்டல்: போலீஸ் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி
போலீஸ்காரரின் கந்து வட்டி கொடுமையால் போலீஸ் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை பழைய பைபாஸ் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 37). இவரது மனைவி தீபா. இவர்களுக்கு கைக்குழந்தை உள்ளது. ராஜீவ்காந்தி அந்த பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை சேர்ந்த திருஞானம் என்ற போலீஸ்காரரிடம் ரூ.15 ஆயிரத்தை கந்து வட்டிக்கு வாங்கி உள்ளார்.
இதற்கு ராஜீவ்காந்தி வட்டியாக மாதந்தோறும் ரூ.1,500 திருஞானத்திடம் கொடுத்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருஞானம் ராஜீவ்காந்தியின் கடைக்கு சென்று உடனடியாக பணத்தை கொடு என்று மிரட்டல் விடுத்துள்ளார். பணம் இல்லை என்று அவர் கூறியதால், திருஞானம் கடையை பூட்டி சாவியை எடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி புகார் அளிக்க தனது மனைவியுடன் நேற்று திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது போலீசார் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ராஜீவ்காந்தி தனது மனைவியுடன் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திடீரென மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கந்து வட்டி கொடுத்த போலீஸ்காரர் திருஞானத்தையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி பொறுப்பேற்கும் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்து வட்டி குறித்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். ஆனால் தற்போது போலீஸ்காரர் ஒருவரே கந்து வட்டி கொடுமை செய்திருக்கிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.