சங்கரன்கோவிலில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
சங்கரன்கோவிலில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குப்பைக்கிடங்கு
சங்கரன்கோவில் ரெயில் நிலையம் அருகே குடியிருப்பு பகுதி அமைந்து உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள நகராட்சி இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று காலை குப்பைக்கிடங்கு அமைக்கும் பணிகளை தொடங்க நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அங்கு வந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
உடனே அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், குப்பைக்கிடங்கு அமைப்பது குறித்து நாளை (வியாழக்கிழமை) உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேச்சுவார்ததை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.