தலைமை பண்பு மேம்பாட்டு பயிற்சி: பள்ளி மாணவர்களுக்கு நடிகர் தாமு ஆலோசனை
தலைமை பண்பு மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சியில், நகைச்சுவை நடிகர் தாமு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பிராட்வே,
சென்னை பெரம்பூர் ரெயில்வே திருமண மண்டபத்தில் புளியந்தோப்பு பகுதியை சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 10 முதல் 12–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலைமை பண்பு மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி புளியந்தோப்பு சரக போலீசாரால் நடத்தப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி கமிஷனர்கள் ஹரிகுமார், அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், முருகன், தமிழ்வாணன் மற்றும் 500–க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டனர். முதன்மை மாணவர் பயிற்சியாளரும், சினிமா நகைச்சுவை நடிகருமான தாமு கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.