கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரம் காங். எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரைபேரம் குமாரசாமியிடம் உரையாடல் பதிவை ஒப்படைத்தது உளவுத்துறை
கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை தீவிரம் அடைந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா நடத்திய குதிரை பேர உரையாடல் பதிவை உளவுத்துறை, முதல்-மந்திரி குமாரசாமி யிடம் ஒப்படைத்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.
குமாரசாமி முதல்-மந்திரியாக இருக்கிறார். ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் மந்திரி பதவி கிடைக்காததால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. சட்டசபை தேர்தலில் 104 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. இதைதொடர்ந்து பா.ஜனதா மாநில தலைவரான எடியூரப்பா அவசரம், அவசரமாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
இருப்பினும் சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் நேரடியாக பேரம் பேசினர். எடியூரப்பா, ஸ்ரீராமுலு, ஜனார்த்தனரெட்டி உள்ளிட்டோர் பேரம் பேசிய உரையாடல் ஒலிப்பதிவு பகிரங்கமாகியது. இந்த பிரச்சினையில் கோர்ட்டு தலையிட்டதால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னதாக எடியூரப்பா பதவி விலகினார். இந்த சம்பவத்தால் பா.ஜனதாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. அதையடுத்து காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியில் முதல்-மந்திரியாக குமாரசாமி பொறுப்பு ஏற்றார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சி அமைக்க பா.ஜனதா மீண்டும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள சதீஸ் ஜார்கிகோளி உள்பட 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு வந்தால் கட்சி செலவில் மீண்டும் எம்.எல்.ஏ. ஆக்கி மந்திரி பதவி வழங்குவதாகவும், அது மட்டுமின்றி தலா ரூ.25 கோடி கொடுப்பதாகவும் ஆசை காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பேரம் பேசப்பட்ட ஆடியோ ஒலிப்பதிவு, முதல்-மந்திரி குமாரசாமியிடம் உளவுத்துறை போலீசார் வழங்கியுள்ளனர். இந்த குதிரை பேர விஷயத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடம் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்சி தாவுவதை தடுக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்குமாறு குமாரசாமி முறையிட்டு உள்ளார்.
பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் உதவியாளர் துபாயில் உள்ள ஒரு தொழில் அதிபரிடம் இந்த பேரம் குறித்து பேசி இருக்கிறார். கர்நாடக சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அதில் உரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மந்திரி சபையில் 7 மந்திரி பதவி இடங்கள் காலியாக உள்ளன. அந்த மந்திரி பதவி இடங்களை நிரப்ப காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி தீவிரம் காட்டி வந்தது. தற்போதைய சூழ்நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் செய்தால், மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் மந்திரிசபை விரிவாக்கத்தை தள்ளி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. கூறுகையில், “நான் காங்கிரசை விட்டு விலக மாட்டேன். இதுபற்றி வெளியான தகவல்கள் தவறானவை. மந்திரிசபை விரிவாக்கம் செய்தால், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்வது சரியல்ல. மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. மந்திரிசபை விரிவாக்கத்தை தொடர்ந்து தள்ளிவைப்பது ஏன்? என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.
காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், “நான் எக்காரணம் கொண்டும் கட்சியை விட்டு விலகமாட்டேன். மந்திரி பதவியை எதிர்நோக்கி உள்ளேன். பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்ன இருந்தாலும், காங்கிரசிலேயே இருந்து பதவியை பெறுவேன். வேறு கட்சிக்கு செல்ல மாட்டேன்” என்றார்.
மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரைபேரம் நடந்த தகவல்கள் வெளியாகி இருப்பது கர்நாடக அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.