மண்டியாவில் உள்ள வீட்டை காலி செய்தார், நடிகை ரம்யா பரபரப்பு தகவல்கள்
மண்டியா வித்யா நகரில் உள்ள வீட்டை நடிகை ரம்யா நேற்று முன்தினம் இரவு திடீரென்று காலி செய்தார். இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. இவர் கடந்த 2012-ம் ஆண்டு இளைஞர் காங்கிரசில் சேர்ந்தார். அதைதொடர்ந்து 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி வெற்றி வாகை சூடி எம்.பி. ஆக தேர்வானார். இதனால் மண்டியா மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் நடிகை ரம்யா பிரபலமானார். மேலும் 2014-ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார்.
இதற்கிடையே மண்டியா மாவட்டத்தை சேர்ந்த மறைந்த நடிகர் அம்பரீசுக்கும், ரம்யாவுக்கும் இடையே மோதல் உருவானது. இதனால் மண்டியா செல்வதையும், மண்டியா மாவட்ட அரசியலில் தலையிடுவதிலும் நடிகை ரம்யா ஒதுங்கியே இருந்து வந்தார்.
2014-ம் ஆண்டுக்கு பிறகு சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் இதுவரை அவர் வாக்களிக்க கூட சொந்த மாவட்டமான மண்டியாவுக்கு செல்லவில்லை. இதனால் பா.ஜனதாவினர் தேர்தல் சமயங்களில், ஓட்டுப்போட மண்டியா வரும்படி வெற்றிலை, பாக்கு, பழம், சேலை, வளையல்களுடன் ரம்யாவுக்கு அழைப்புவிடுத்தனர். தான் தேர்தலில் போட்டியிட்டால் மட்டும் மண்டியா மக்கள் மீது அக்கறை உள்ளவர் போல ரம்யா செயல்படுவதாகவும் கண்டன குரல்கள் எழுந்தன.
அதுபோல் மறைந்த விவசாய சங்கத் தலைவர் புட்டண்ணய்யா, நடிகர் அம்பரீஷ், பஸ் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் பலியான 30 பேருக்கு அஞ்சலி செலுத்தவும் நடிகை ரம்யா மண்டியா பக்கம் செல்லவில்லை. இதுவும் நடிகை ரம்யாவுக்கு எதிராக மண்டியா மாவட்ட மக்களை கோபமடையச் செய்தது.
இதுபோன்ற காரணங்களால் எதிர்க் கட்சியினர் மட்டுமின்றி காங்கிரசார், அம்பரீசின் ஆதரவாளர்கள் மற்றும் தனது ரசிகர் களின் அதிருப்திக்கு ரம்யா ஆளாகிவிட்டார். காங்கிரசின் சமூகவலைத்தள பிரிவு தலைவியாக பொறுப்பு வகிக்கும் ரம்யாவுக்கு, சமூகவலைத்தளங்கள் மூலமாகவே ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களது மனக்குமுறலை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அரசியலில் ரம்யா காலூன்ற எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அடுத்து நடிகர் அம்பரீஷ் தான் அதிகளவில் உதவியதாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட நடிகர் அம்பரீசின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகை ரம்யா செல்லாததால் அவருக்கு பலரும் தங்களது எதிர்ப்பையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். மேலும் நடிகர் அம்பரீஷ் ரசிகர்கள் நடிகை ரம்யா மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மண்டியா டவுன் வித்யாநகரில் உள்ள நடிகை ரம்யாவின் வாடகை வீட்டுக்கு கடந்த ஒரு வாரமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நடிகர் அம்பரீசின் இறுதிச்சடங்கில் பங்கேற்காததற்கு, தனது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு ேநாய் தான் காரணம் எனக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ரம்யா ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இருப்பினும் நடிகை ரம்யா மீது அம்பரீஷ் ரசிகர்களின் கோபம் தணியவில்லை.
நல்லதோ, கெட்டதோ எந்த நிகழ்வுக்கும் மண்டியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக ரம்யா செல்லவில்லை. இதனால் ஒட்டுமொத்தமாக மண்டியா மாவட்ட மக்களின் கோபத்துக்கு நடிகை ரம்யா ஆளாகிவிட்டார் என்றால் மிகையல்ல. தொடரும் சர்ச்சைகள், தனக்கு எதிரான கருத்துக்களால் நடிகை ரம்யா மனம் நொந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மண்டியாவில் உள்ள வாடகை வீட்டை காலி செய்ய அவர் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு நடிகை ரம்யா மண்டியா வித்யாநகரில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டார். அவரது வீட்டில் இருந்து லாரி ஒன்றில் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் ஏற்றி எடுத்துச்செல்லப்பட்டது. இதுபற்றி அவர் தனது ரசிகர்களிடமோ, ஆதரவாளர்களிடமோ கூறவில்லை என சொல்லப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று கன்னட செய்தி தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரது வீட்டு பாதுகாப்புக்காக காவலாளியும், போலீசாரும் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
நடிகை ரம்யா வீட்டை காலி செய்ததால், மண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது ரசிகர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடரும் சர்ச்சை, நடிகர் அம்பரீஷ் ரசிகர்களின் கோபம் ஆகிய காரணங்களால் நடிகை ரம்யா வீட்டை காலி செய்துவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ரம்யா வசித்து வந்த வித்யாநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டை காலி செய்த ரம்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, மக்கள் பிரதிநிதியாக இருந்த ரம்யா, தற்போது ஊரை விட்டு செல்வது என்ன நியாயம்?. இது தவறான செயல். அவர் தவறுக்குமேல் தவறு செய்கிறார் என்றார். மேலும் அவர் நடிகை ரம்யாவை ‘மண்டியாவின் களங்கம்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.