கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கேட்டு கலெக்டரிடம் மனு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கேட்டு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடகாடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், நாங்கள் எங்களது அவசர தேவைக்காக எங்கள் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் மாதம் மாதம் வட்டியுடன் தவணை முறையில் செலுத்தும் வகையில் கடன் பெற்று உள்ளோம். இந்நிலையில் கஜா புயலால் எங்களது கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் எங்களிடம் தவணை தொகையை பெற வரும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து நாங்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
கல்லாங்குடி காலனி பகுதியை சேர்ந்த மகேஷ்வரி கொடுத்த மனுவில், எனது கணவர் அய்யப்பன், புயல் தாக்கியபோது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். எனவே எனது குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் உரிமை மற்றும் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த திருநங்கைகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டங்களில் பலமுறை நாங்கள் வீட்டு மனை கேட்டு மனு அளித்தோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டு மனை கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
கறம்பக்குடி செட்டிவிடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உமாமகேஷ்வரி கொடுத்த மனுவில், செட்டிவிடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கஜா புயலால் பாதிக்கப்பட்டு, ஓடுகள் மற்றும் சுவர்கள் முழுவதும் சேதமடைந்து உள்ளது. எனவே அதற்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
செம்பாட்டூர் பகுதியை சேர்ந்த மீனாட்சி கொடுத்த மனுவில், நாங்கள் செம் பாட்டூர் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு அருகே புறம்போக்கு நிலத்தில் குடிசைபோட்டு வசித்து வந்தோம். இந்த குடிசைகள் கஜா புயலில் விழுந்து விட்டன. எனவே எங்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.