திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

பேரிகை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2018-12-03 22:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ளது குடிசாதனப்பள்ளி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி கங்காஜோதி (வயது 19). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கங்காஜோதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கங்காஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 6 மாதங்களுக்குள் கங்காஜோதி இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மற்றும் ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்