நாட்டறம்பள்ளி அருகே கணினி ஆசிரியரை நீக்குவதற்கு எதிர்ப்பு மாணவிகள் தரையில் அமர்ந்து போராட்டம்.
நாட்டறம்பள்ளி அருகே கணினி ஆசிரியரை நீக்குவதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தலைமை ஆசிரியை அறை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நாட்டறம்பள்ளி,
நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் சத்யா.
இந்த நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்து ஆசிரியை சத்யாவை நீக்கிவிட்டு, வேறு ஒருவரை புதிதாக கணினி ஆசிரியராக நியமிக்க முடிவு செய்தனர்.
அதனை அறிந்து பிளஸ்-1, பிளஸ் -2 வகுப்பு மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தலைமை ஆசிரியை செலினா அறை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆசிரியை சத்யாவை நீக்க கூடாது என வலியுறுத்தினர்.
இதையடுத்து தலைமையாசிரியை செலினா, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து ஆசிரியை சத்யாவை பணிபுரிய ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
அதன்பேரில் மாணவிகள் அங்கிருந்து கலைந்து, தங்களது வகுப்பறைக்கு சென்றனர்.