முறை தவறிய காதலை தந்தை கண்டித்ததால்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
முறை தவறிய காதலை தந்தை கண்டித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்,
வானூர் தாலுகா பட்டானூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகள் ஹரிதா (வயது 18). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது உறவினரான நிர்மல்ராஜ் என்பவரை காதலித்து வந்தார். இதையறிந்த சத்தியமூர்த்தி, தனது மகளை அழைத்து, நிர்மல்ராஜ் உனக்கு தம்பி முறையாவார் என்று கூறி கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த மாணவி ஹரிதா, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஹரிதா இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.