வில்லியனூரை அடுத்த அரியூரில் ஊசி மூலம் பூச்சி மருந்தை உடலில் செலுத்தி தொழிலாளி தற்கொலை

விபத்தினால் ஏற்பட்ட காயத்தால் தொடர் வலியால் அவதிப்பட்ட தையல் தொழிலாளி வாழ்க்கையில் வெறுப்படைந்து ஊசி மூலம் பூச்சி மருந்தை உடலில் செலுத்தி தற்கொலை செய்தார்.

Update: 2018-12-02 23:18 GMT

வில்லியனூர்,

வில்லியனூரை அடுத்த அரியூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபன் (வயது 65), தையல் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் காலில் தொடர்ந்து வலி இருந்து வந்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கால் வலியால் அவதிப்பட்ட சந்திரபன் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். அதனால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை ஊசியில் ஏற்றி பின்னர் ஊசி மூலம் அந்த பூச்சி மருந்தை உடலில் செலுத்தினார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சந்திரபன் பரிதாபமாகச் செத்தார்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்