ராணிப்பேட்டையில் கர்நாடக அரசு சொகுசு பஸ் கவிழ்ந்தது கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம்

ராணிப்பேட்டையில் சென்னை நோக்கி சென்ற கர்நாடக அரசு சொகுசு பஸ் கவிழ்ந்தது. இதில் கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2018-12-02 22:59 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கர்நாடக அரசு சொகுசு பஸ் ஒன்று நேற்று காலை ராணிப்பேட்டை எம்.பி.டி. சாலையில் வந்து கொண்டிருந்தது.

பஸ்சை கர்நாடக மாநிலம் பெட்டநாயகனூர் ஹள்ளி பகுதியை சேர்ந்த உமேஷ் (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர்.

ராணிப்பேட்டை காரை கூட்ரோடு அருகே வந்தபோது திடீரென பஸ் நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் முன்புறம் அமர்ந்திருந்த கண்டக்டர் பெங்களூரு ஆர்.ஜெ. நகர் பகுதியை சேர்ந்த மோகன் (57), பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் செங்கல்பட்டு அருகே பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெகன்ராஜ் (39), சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த செல்வம் (45) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். படுகாயமடைந்த 3 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்