மக்காச்சோளம் சாப்பிடுகிறீர்களா?
மழைக்காலத்தில் நெருப்பில் வேகவைத்த மக்காச்சோள முத்துக்களை சுடச்சுட சாப்பிடுவதற்கு பலரும் விரும்புவார்கள்.
மழைக்காலத்தில் நெருப்பில் வேகவைத்த மக்காச்சோள முத்துக்களை சுடச்சுட சாப்பிடுவதற்கு பலரும் விரும்புவார்கள். அதை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று வலி, இரைப்பை பிரச்சினை போன்ற வயிற்று உபாதைகள் ஏற்படக்கூடும். ‘‘மக்காச்சோளம் சாப்பிட்டதும் தண்ணீர் பருகும்போது செரிமானத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். மக்காச்சோளத்தில் இருக்கும் ஸ்டார்ச், பருகும் தண்ணீருடன் சேர்ந்து வாயு பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். வயிறு வீக்கம், வயிற்றுவலி போன்ற பிரச்சினைகளும் உருவாகும்’’ என்கிறார், டாக்டர் அஷுதோஷ்.
மக்காச்சோளம் சாப்பிட்டு 30 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் பருக வேண்டும். மேலும் தண்ணீருக்கு பதில் எலுமிச்சை சாறு பருகுவது நல்லது. எலுமிச்சை சாறுக்கு செரிமானத்தை எளிமைப்படுத்தும் தன்மை இருக்கிறது. ஏற்கனவே மழைக்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
மக்காச்சோளத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். எனினும் மக்காச்சோளத்தை அவித்த உடன் சூடாக சாப்பிடுவதே நல்லது. சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் மக்காச்சோளங்கள் சூடாக இருந்தாலும் அவை எப்போது வேகவைக்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீண்ட நேரத்துக்கு முன்பு வேகவைத்தவற்றை திரும்பவும் வேக வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அதனால் வயிறுக்கு பாதிப்பு ஏற்படும்.