போலீஸ் நிலையத்துக்கு உடலில் தீவைத்து கொண்டு ஓடிய பெண்
மான்கூர்டில் உடலில் தீவைத்து கொண்டு போலீஸ் நிலையத்துக்கு ஓடி வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பை மான்கூர்டு அன்னாபாவு சாட்டே நகரை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது40). கணவர் வேலைக்கு சென்று விட்டதால், இவர் மட்டும் நேற்று வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.
இந்தநிலையில், காலை 10 மணி அளவில் திடீரென ரேஷ்மா தனது உடலில் தீவைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த அவர், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு ஓடினார்.
உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் பெண் ஓடி வருவதை கண்ட போலீசார் அங்கு கிடந்த போர்வையினால் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 50 சதவீதம் தீக்காயம் அடைந்த அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண்ணின் இந்த விபரீத செயலுக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் உடலில் தீவைத்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு ஓடிவந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.