தாம்பரத்தில் ரவுடி வெட்டிக்கொலை; 2 பேர் கைது
தாம்பரத்தில் ரவுடியை 2 பேர் வெட்டிக்கொலை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அமுல்ராஜ் (வயது 39). இவர் மீது கொலை, கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளது. கடந்த ஜூலை மாதம் வழிப்பறி வழக்கில் தாம்பரம் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சில மாதங்களில் வெளியே வந்த அமுல்ராஜ் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தார்.
தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் வேலு (40). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஆலந்தூரை சேர்ந்த பிரமுகர் ஒருவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வந்தார். இதைத்தொடர்ந்து அமுல்ராஜ், வேலுவை பேச அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை சந்திக்க வேலு செல்லவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை தாம்பரம் ரங்கநாதபுரம் 4-வது தெரு பகுதியில் உள்ள ஏரிக்கரையில் வேலு தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அமுல்ராஜ், வேலுவுடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் வேலுவிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வேலு மற்றும் அவரது நண்பர் ரமேஷ் (35) ஆகியோர் அமுல்ராஜை கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அமுல்ராஜின் உடலை ஏரிக்கரை யில் போட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு சென்ற தாம்பரம் போலீசார் அந்த வழியாக வந்த வேலு மற்றும் ரமேஷை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்படி அமுல்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வேலு, ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலுவை கொலை செய்ய அமுல்ராஜ் திட்டமிட்டதாகவும், இதை தெரிந்து கொண்ட வேலு, அமுல்ராஜை தீர்த்து கட்டினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.