விக்கிரவாண்டி அருகே ரெயில்முன் பாய்ந்து வியாபாரி தற்கொலை
விக்கிரவாண்டி அருகே ரெயில்முன் பாய்ந்து வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் மகன் சுதாகர் (வயது 30). இவர் சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுதாகர் சொந்த ஊரான வி.சாத்தனூருக்கு வந்துள்ளார். நேற்று அதே பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவில் அருகே ரெயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் சுதாகர் பிணமாக கிடந்தார்.
இதை அந்த வழியாக வயலுக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுதாகர் அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.