வருவாய் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை இ–சேவை திறந்த வெளி இணையதளம் மூலம் பெறலாம்- கலெக்டர் தகவல்

வருவாய் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை இ– சேவை திறந்த வெளி இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-12-01 22:15 GMT

திருவண்ணாமலை,

தமிழக அரசால் வழங்கப்படும் சேவைகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் உருவாக்கப்பட்டு, பொதுச் சேவை மையங்கள் வாயிலாக பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது இ– சேவை இணையதளம் மூலம் 70 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அனைத்து சேவைகளும் அரசின் பொது சேவை மையங்கள் மூலமாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை சான்றிதழ்கள் பெற நெருக்கடியான காலம் என்பதால் பொது சேவை மையங்களில் நெரிசல் ஏற்படுகிறது. சான்றிதழ்கள் வாங்க நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. மேலும் பொது சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றது.

இதனால் மற்ற நேரங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் இ–சேவை வசதியை திறந்த வெளி இணையதளம் மூலம் தங்கள் வீட்டில் இருந்தபடியே எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொது மக்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

எனவே, https://www.tnega.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக அரசால் வழங்கப்பட்டு வரும் வருவாய்த் துறையை சேர்ந்த வரும் வருவாய்த் துறையை சேர்ந்த வருமானம், பிறப்பிடம், இருப்பிடம், விதவை, வேலையில்லா சான்றிதழ் உள்பட 20 வகையான சான்றிதழ்களை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்