புதுக்கோட்டையை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தென்னை விவசாயி செல்லத்துரை பேசுகையில், கஜா புயலால் பல லட்சம் தென்னை மரங்களை இழந்து விட்டோம். சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்ற அறுவை எந்திரம் வழங்க வேண்டும். தென்னை மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொக்லைன் ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயி தனபதி பேசும்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் முறையான கணக்கெடுப்பு செய்து விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு, தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
விவசாயி ராமசாமி பேசும்போது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தேக்கு, செம்மரங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயி துரைமாணிக்கம் பேசும்போது, பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயி சேகர் பேசும்போது, விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் வங்கிகளில் தற்போது நடைபெறும் நகை ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலினால் விவசாயம் மிகுந்த பாதிப்பை சந்தித்து உள்ளது. விவசாய நிலங்களில் உள்ள தென்னை, வாழை, மா, பலா, கரும்பு, மரவள்ளி கிழங்கு, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் முற்றிலுமாக பாதிப்படைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில் விவசாய இழப்புகள் குறித்த பாதிப்பு விவரங்கள் துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டு வருவதுடன் வேளாண்மைத்துறையின் 11 பேர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான உரம், இடுபொருள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு விவசாய பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்றார்.