அரசு ஊழியர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள்
அரசு ஊழியர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
தாமரைக்குளம்,
2018-2019-ம் ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரியலூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில், அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. தடகளம் விளையாட்டில் ஆண்களுக்கு 100, 200, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளிலும், பெண்களுக்கு 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளிலும் மற்றும் இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து (ஆண்களுக்கு மட்டும்), டென்னிஸ், கபடி, மேஜைபந்து, வாலிபால் ஆகிய குழு விளையாட்டுகளிலும் போட்டிகள் நடைபெற்றன.
இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெற்றவர்கள் மற்றும் குழுப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட சிறப்பான அணியினர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.