புயலால் தென்னை மரங்கள் சாய்ந்ததால் மனவேதனை: குளத்தில் குதித்து விவசாயி தற்கொலை போலீசார் விசாரணை

புயலால் தென்னை மரங்கள் சாய்ந்ததால் மனவேதனை அடைந்த விவசாயி, குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-30 22:45 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு வைத்தியர் காட்டை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது70). விவசாயி. கஜா புயலால் இவருக்கு சொந்தமான தோப்பில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் ராஜகோபால் மனவேதனையில் இருந்து வந்தார். மேலும், நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உறவினர்களிடம் புலம்பி வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜகோபாலை காணவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ராஜகோபால் தனது வீட்டின் பின்புறம் உள்ள குளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புயலால் தென்னை மரங்கள் சேதம் அடைந்த மனவேதனையில் இருந்து வந்த ராஜகோபால் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது.

இதுபற்றி ராஜகோபாலின் மகன் தர்மராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்