தூத்துக்குடியில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-30 22:00 GMT
தூத்துக்குடி, 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் 

தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ–ஜியோ) சார்பில் நேற்று மாலை தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மரிய அந்தோணி ரூஸ்வெல்ட், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் விக்பர்ட், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பழனிச்சாமி, தமிழக தமிழாசிரியர் கழகம் சுந்தர்சிங் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள் 


ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், மறுக்கப்பட்ட 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பவுல்ஆபிரகாம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவன், சத்துணவு பணியாளர் சங்கம் தமிழரசன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் செல்வின், நிலஅளவை அலுவலர் ஒன்றிப்பு சங்கம் அண்ணாமலை பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்