கல்வி, வேலைவாய்ப்பில் மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு சட்டசபையில் மசோதா ஒருமனதாக நிறைவேறியது
மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மராட்டிய சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
மும்பை,
மராட்டியத்தில் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 13 கோடி. இவர்களில் மராத்தா சமுதாயத்தினர் 33 சதவீதம் உள்ளனர்.
இந்த சமுதாயத்தினர் அரசியலில் கொடி கட்டி பறக்கின்றனர். குறிப்பாக மராட்டிய மாநிலம் 1960-ம் ஆண்டு உருவான பிறகு இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் முதல்-மந்திரி பதவியை அலங்கரித்து உள்ளனர். அவர்களில் மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரி ஒய்.பி. சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மறைந்த காங்கிரஸ் தலைவர் விலாஸ் ராவ் தேஷ்முக் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆனால் கல்வி, வேலைவாய்ப்பில் தங்களது சமூகம் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும், அவற்றில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மராத்தா சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, கடந்த முறை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, பிரிதிவிராஜ் சவான் தலைமையிலான அரசு மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு அளித்து அவசர சட்டம் பிறப்பித்தது. ஆனால் இந்த அவசர சட்டத்துக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்தது.
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் அகமத் நகர் மாவட்டம் கோபர்டி கிராமத்தில் மராத்தா சமுதாயத்தை சேர்ந்த 14 வயது சிறுமி மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த வாலிபர்களால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டாள்.
இந்த பிரச்சினையில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தங்களது சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 50 அமைதி பேரணிகளை பிரமாண்டமாக நடத்தி நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
ஆனால் மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடந்த ஜூலை மாதம் நடந்த அவர்களது போராட்டங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. பொதுச்சொத்துகள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன.
இதற்கிடையே மராத்தா சமுதாயத்தினரின் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அரசு கேட்டுக்கொண்டது.
இந்த ஆணையம் சமீபத்தில் தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.
அந்த ஆய்வு அறிக்கையில், மராத்தா சமுதாய மக்கள் தொகையில் 37.28 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும், 93 சதவீத குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த ஆய்வு அறிக்்கை மூலம் அந்த சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க சாதகமான சூழல் உருவானது.
மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், மராத்தா இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தங்கர் சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் மராட்டிய சட்டசபையில் நேற்று மராத்தா இடஒதுக்கீடு மசோதாவை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிமுகம் செய்தார். சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை செய்வதாகவும், இதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதா மேல்-சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு நிறைவேற்றப்பட உள்ளது.
மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதன் மூலம் மராட்டியத்தில் பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்படும் மொத்த இடஒதுக்கீடு 68 சதவீதமாக உயர்ந்து உள்ளது. அதிகப்பட்சமாக தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில், இதில் மராட்டியம் 2-வது இடத்தை பிடித்து உள்ளது.
அடுத்ததாக அரியானாவில் 67 சதவீத இடஒதுக்கீடும், தெலுங்கானாவில் 62 சதவீத இடஒதுக்கீடும் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.