அதிகாரி உள்பட 2 பேரை சுட்டுக்கொன்ற விமானப்படை வீரருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் அதிகாரி உள்பட 2 பேரை சுட்டுக்கொன்ற விமானப்படை வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
மும்பை சாந்தாகுருசில் விமான படை வீரர்களுக்கான முகாம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி அங்கு வீரர்கள் ரோகித் யாதவ் (வயது 53), சோம்நாத், குழு அதிகாரி எச்.ஆர். சிங் ஆகியோர் இருந்தனர். திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த பீம்சிங், தாப்பா ஆகியோர் அங்கு ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது அதிகாரி எச்.ஆர். சிங்கும், வீரர் சோம்நாத்தும் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களை ரோகித் யாதவ் சுட்டுக் கொன்றது தெரியவந்தது. உடனே இருவரும் அவரை பிடிக்க முயன்றனர். இதில் அவர்களையும் தாக்கி விட்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோரேகாவ் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரோகித் யாதவை கைது செய்தனர். டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் அவர் இருவரையும் சுட்டுக்கொலை செய்ததாக கூறினார். போலீசார் அவர் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, 19 பேர் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.
விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய கோர்ட்டு, குற்றவாளி ரோகித் யாதவிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.