திசையன்விளை பகுதியில் மணல் கடத்தல் கும்பலுடன் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தொடர்பு அதிகாரிகள் தீவிர விசாரணை
திசையன்விளையில் மணல் கடத்தல் கும்பலுடன் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.;
திசையன்விளை,
திசையன்விளையில் மணல் கடத்தல் கும்பலுடன் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர் கைதுதிசையன்விளை நம்பியாற்றில் இருந்து மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசாருக்கும், மணல் கொள்ளையர்களுக்கும் இடையே மோதலும், நட்பும் நிலவி வருகிறது. ஒருசில போலீசார் மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். சிலர் மணல் கடத்தலுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மணல் கொள்ளை கும்பலுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்ட போலீஸ்காரர் சிவா மீது உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தது.
மேலும் ஒருவருக்கு தொடர்புஇது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தொடர்ந்து நேரடி விசாரணை நடத்தி வருகிறார். அவரது விசாரணை வளையத்தில் மேலும் ஒரு போலீஸ்காரர் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், ஆதாரங்களையும் போலீஸ் அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது போலீசார் மத்தியிலும், மணல் கடத்தல் கும்பலுக்கும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.