புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது கரூரில் செந்தில்பாலாஜி பேட்டி
கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர்,
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கரூர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் அரிசி, கோதுமை மாவு, பிஸ்கட், போர்வை, துண்டு, மெழுகுவர்த்தி, தண்ணீர் பாட்டில் மற்றும் அத்தியாவசிய மருந்துகள், நாப்கின் உள்பட ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த நிவாரண பொருட்களை கரூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்திலிருந்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது அ.ம.மு.க. கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி உள்பட நிர்வாகிகள் சரக்கு வாகனங்களில் நிவாரண பொருட்களை ஏற்றி நாகை உள்ளிட்ட புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்காக அனுப்பி வைத்தனர். இதில் கரூர் நகர செயலாளர் கோல்டு ஸ்பாட் ராஜா, மாவட்ட துணை செயலாளர் தாரணி சரவணன், அவை தலைவர் எஸ்.பி.லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் தம்பி சுதாகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று சில மணி நேரங்கள் மட்டுமே பார்வையிட்டு சென்றிருக்கின்றனர். நிவாரணம் கிடைக்காததால் கோபமடைந்த மக்கள் அமைச்சர்கள் உள்ளிட்டோரை விரட்டியடித்திருக்கின்றனர். அவர்கள் சுவர் ஏறி குதித்தும், இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றதையும் பார்க்கையில் மக்களது கோபத்தின் வெளிப்பாடு தெரிந்தது. இதை வைத்து பார்க்கையில் நிவாரண பணிகளில் தமிழக அரசு தோல்வி அடைந்திருப்பது தெரிகிறது.
வருகிற சட்டமன்ற இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அவர்கள் டெபாசிட் இழப்பார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, நீங்கள் மேல்முறையீட்டுக்கு செல்லுங்கள் என்று தொடர்ந்து எங்களிடத்தில் வலியுறுத்தி ஆட்களை பிடிக்கும் பணிகளை செய்கின்றனர். காலம் வரும் போது அவர்களது பெயரை வெளி யிடுவோம்.
தமிழக மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. 2 சட்டமன்ற தொகுதிகள் காலியானபோதே உடனடியாக தேர்தல் நடத்தாதது ஏன்? என்பது தெரியவில்லை. அதற்கு அளித்த பதிலும் ஏற்கும் படியானதாக இல்லை. தமிழக மக்கள் நலன் பாதுக்காக்கப்பட வேண்டும் எனில் எடப்பாடிபழனிசாமி அரசை அப்புறப்படுத்தி பொது தேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.