திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை 1½ கிலோ தங்கம், 19¼ கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தன

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.2 கோடி செலுத்தினர். மேலும் 1½ கிலோ தங்கம், 19¼ கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தன.

Update: 2018-11-28 21:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.2 கோடி செலுத்தினர். மேலும் 1½ கிலோ தங்கம், 19¼ கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கோவில் இணை ஆணையர் பாரதி தலைமை தாங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ரத்தினவேல், செல்வராஜ், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் முதுநிலை கணக்கு அலுவலர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் சுமார் 200 பேர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.2 கோடி 

இதில் கோவில் நிரந்தர உண்டியல்களில் ரூ.2 கோடியே 48 ஆயிரத்து 386–ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.70 ஆயிரத்து 723–ம், கோசாலை உண்டியல்களில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 605–ம், கோவில் அன்னதான உண்டியலில் ரூ.6 லட்சத்து 51 ஆயிரத்து 783–ம், சிவன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.8 ஆயிரத்து 776–ம் என மொத்தம் ரூ.2 கோடியே 9 லட்சத்து 273–யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேலும் உண்டியல்களில் ஒரு கிலோ 557 கிராம் தங்கம், 19 கிலோ 298 கிராம் வெள்ளி, 24 கிலோ 360 கிராம் பித்தளை பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேலும் செய்திகள்