விளக்கு போன்று தோற்றமளிக்கும் கேமரா
வீடுகளிலும், அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியமாகிவிட்டது. ஆனால் திருடர்கள் இந்த கேமராக்கள் இருப்பதை பார்த்து அவற்றை சேதப்படுத்துவதும் நிகழ்ந்து வருகிறது.
கேமரா இருப்பதே தெரியாமல் வாசலில் இருந்து அமைதியாக கண்காணிக்கிறது இந்த குணா (kuna) கேமரா. மேற்பார்வைக்கு பார்த்தால் அலங்கார லைட் போன்று காட்சியளிக்கும் இதன் அடியில் கேமரா இருக்கிறது. இதை நமது ஸ்மார்ட் போனுடன் இணைப்பில் வைத்துக் கொள்ள முடியும். நாம் இல்லாத நேரம் நமது வீட்டுவாசலில் யாராவது வந்தால் உடனே சென்சார் மூலம் அறிந்து அங்கே நடக்கும் நிகழ்வை வீடியோப் பதிவாக நமது போனுக்கு அனுப்பிவிடும். தெரிந்த நபராய் இருந்தால் நமது ஸ்மார்ட்போனில் இருந்து கேமரா வழியாகவே அவருடன் பேசலாம். துல்லியமான இதன் சென்சார்கள் சிறிய அசைவுகளையும் அறிந்து விடும். யாரேனும் திருட முற்பட்டால் நாம் வீடியோவில் பார்த்து அலாரத்தை ஒளி எழுப்பி அந்த நபரை பயமுறுத்தவும் சுற்றத்தினரை எச்சரிக்கவும் செய்யலாம். எல்லா காலங்களிலும் பயன்படும் விதமாக வெதர் புரூப் முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களிலும் இது செயல்படும். ஆறு வண்ணங்களில் இந்த விளக்கு கேமரா கிடைக்கிறது.